1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 17 ஏப்ரல் 2023 (09:18 IST)

இந்த பாட்டு புரியக்கூடாதுன்னு பாடல் ஆசிரியர்கிட்ட சொன்ன ஏ ஆர் ரஹ்மான்!.. ஏன் தெரியுமா?

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாவதை அடுத்து நேற்று படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு நடந்தது. அதில் படத்தில் நடித்த கலைஞர்களோடு கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

முதல் பாகத்தின் வெற்றிக்கு படத்தில் இடம்பெற்ற பாடல்களும் முக்கியக் காரணமாக அமைந்தன. முக்கியமாக பொன்னி நதி பாக்கனுமே பாடல் அமைந்தது. இந்த பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுதியிருந்தார். இரண்டாம் பாகத்திலும் பெரும்பகுதி பாடல்களை அவர் எழுதியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் கலந்துகொண்ட ஒரு நேர்காணலில் “முதல் பாகத்தில் இடம்பெற்ற சாய சஞ்சலை என்ற பாடல் மெட்டமைக்கும்போது, இந்த பாடல் ரசிகர்களுக்கு புரியக்கூடாது. அதுபோல வார்த்தைகள் அமையவேண்டும் என கூறிவிட்டாராம். அதற்குக் காரணம் படத்தின் முக்கியமான காட்சியில் அந்த பாடல் பின்னணியில் ஒலிக்கும், பாடல் புரிந்தால், அந்த காட்சியை ரசிகர்கள் முழுதாக உள்வாங்கிக் கொள்ள முடியாது எனக் கூறினாராம். அதனால் பைந்தமிழ் நடையில் அந்த பாடலை இளங்கோ எழுதினாராம்.