திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 26 பிப்ரவரி 2017 (19:54 IST)

என்னை சீண்டினால் பொறுத்து கொள்ள மாட்டேன்: கே.ஏ.செங்கோட்டையன் ஆவேசம்

வாட்ஸ் அப்பில் என்னை பற்றி தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். என்னை சீண்டினால், நான் பொறுத்து கொள்ள மாட்டேன் என கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.


 

 
ஜெயலலிதா பிறந்த நாளையோட்டி நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:
 
நான் 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். துவக்கிய காலத்திலிருந்தே எதற்கும் மாறாமல் எனது வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்து வருகிறேன். முதல்வர் ஜெயலலிதா பலருக்கு எம்.பி., எம்.எல்.ஏ. மற்றும் கட்சியிலும் பல்வேறு பதவிகளை கொடுத்தார். ஆனால், அவர்கள் இன்றைய தினம் மாற்று அணிக்குச் சென்று அதிமுகவிற்கே துரோகம் செய்து விட்டார்கள். 
 
நீங்கள் எனக்கு வாக்களித்து அங்கீகாரம் செய்ததால் தான் தற்போது பள்ளிகல்வித்துறை அமைச்சராக உங்கள் முன்னால் நின்று பேசிக் கொண்டிருக்கிறேன்.
 
என்னைப் பற்றி வாட்ஸ் அப்பில் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். என்னை சீண்டாதீர்கள். நான் பாய்ந்தால், என்னவாகும் என்பது உங்களுக்குத் தெரியும். நான் அமைதியாக இருக்கிறேன், என கூறியுள்ளார்.