1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. I will meet sasikala soon says ops

சசிகலாவை கூடிய விரைவில் சந்திப்பேன்: ஓபிஎஸ் அதிரடி பேட்டி

OPS Sasikala
நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து வரும் காலத்தில் இருவரும் இணைந்து செயல்படுவோம் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார் என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக சசிகலாவையும் விரைவில் சந்திப்பேன் என ஓபிஎஸ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அதிமுகவின் ஓபிஎஸ் இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்து இருக்கும் நிலையில் திடீரென நேற்று டிடிவி தினகரன் உடன் ஓபிஎஸ் சந்தித்து இருவரும் இணைந்து அதிமுகவின் மீட்போம் என தெரிவித்தார் 
 
இந்த நிலையில் சசிகலாவையும் விரைவில் சந்திக்க உள்ளேன் என்றும் சசிகலா வெளியூரில்  இருப்பதால் அவர் சென்னை வந்தவுடன் அவரை சந்திக்க திட்டமிட்டுள்ளேன் என ஓபிஎஸ் கூறியுள்ளார். ஓபிஎஸ், தினகரன் மற்றும் சசிகலா ஆகிய மூவரும் சேர்ந்த அதிமுக அணி எடப்பாடி பழனிச்சாமி அணியை விட வலுவாக இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் கடன், மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர்: பிரியங்கா காந்தி வாக்குறுதி