1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 30 ஆகஸ்ட் 2023 (21:37 IST)

''நீட் கோச்சிங் சென்டரின் மோசடி'' - ராஜஸ்தான் மாநில அமைச்சர் விமர்சனம்

NEET
மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிராக தமிழகத்தில் ஆளும்கட்சியான திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
 

இந்த நீட் தேர்வினால் பல மாணவர்கள் தற்கொலை செய்துள்ள நிலையில், இந்த நீட்டை கண்டித்து, சமீபத்தில்  திமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், அந்த மாநில உள்துறை அமைச்சர் ராஜேந்திர சிங் இன்று  நீட் தேர்வு பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

வெற்றி பெற்றவர்களை வைத்து விளம்பரம் செய்யும் நீட் கோச்சிங் நிறுவனங்கள் மற்ற மாணவர்களின் நிலையைப் பற்றி கூறாமல் உள்ளது. இது ஒரு மோசடியாகும்…. ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் ராஜஸ்தான் மா  நிலம் கோட்டா நகரத்தில் படித்து வருகின்றனர். இவர்கள் 20 ஆயிரம் மாணவர்கள் படிக்கும் ஒரு நிறுவனத்தில் 20,30 பேரை மட்டும்தான் வைத்து விளம்பரம் செய்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.