ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 23 ஜனவரி 2019 (15:30 IST)

ஆறுமுகசாமி ஆணையமா? அது நாடகமாச்சே: தெறிக்கவிடும் மேத்யூ சாமுவேல்

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என தெகல்கா பத்திரிக்கையாளர் மேத்யூ சாமுவேல் அதிரடியாக கூறியுள்ளார்.
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக தெகல்கா பத்திரிக்கையாளர் மேத்யூஸ் என்ற பத்திரிகையாளர் வெளியிட்ட வீடியோ தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தெகல்கா பத்திரிக்கையாளர் மேத்யூஸ், ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் மீது துளியளவும் நம்பிக்கையில்லை. கதை திரைக்கதை என முழுதும் ஜோடிக்கப்பட்ட நாடகமது. ஆறுமுகசாமி ஆணையம் கண்டிப்பாக ஜெ.மரணம் குறித்து தகவலை வெளியிடாது என அதிரடியாக அவர் கூறினார்.