மரணம் வரப்போவதை இதை வைத்து எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்...!

மரணம் என்பது யாரும் விரும்பாத ஒன்று. ஆனால், பிறக்கும் போதே மரணம் நிச்சயம் என்பது எழுதப்படாத நியதி. ஆனால், அந்த மரணம்  எப்போது வரும் யாராலும் கணிக்க முடியாது.
  
மரணத்தின் அறிகுறி என சிவ புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை என்னவென்று பார்ப்போம்.
 
* வாய், காது மற்றும் கண் போன்ற உடல் உறுப்புகள் செயலிழப்பு அல்லது செயலிழந்து வருகிறது என்றால் அதிலிருந்து ஆறு மாதங்களில்  மரணம் நிச்சயம்  என் சிவ புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
 
* திடீரென உடல் வெள்ளை மற்றும்  மஞ்சளாக நிறம் மாற துவங்குகிறது. உடலில் ஆங்காங்கே சிவப்பு புள்ளிகள் தென்படுகின்றன என்றால்  அடுத்த ஆறு மாதத்தில் அந்த நபர் இறந்து போவார்.
 
* தொண்டை மற்றும் நாக்கு ஒருவருக்கு விடாமல் வறட்சி அடைந்துக் கொண்டே இருக்கிறது எனில், அந்த நபர் விரைவில் இறந்துவிடுவார்  என்று அர்த்தம்.
 
* ஒருவரது இடது கை அச்சம் அல்லது பதட்டத்தின் காரணமாக நடுங்கிக் கொண்டே இருக்கிறது. நாவில் வறட்சி ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது என்றால், அந்த நபர் ஒரு மாதத்தில் இறந்துவிடுவர்.
 
* ஒருவரால் கருப்பு அல்லது சிவப்பு நிற வட்டத்தை நிலா மற்றும் சூரியனில் பார்க்க முடிகிறது என்றால் அவர் 15 நாட்களுக்குள்  இறந்துவிடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
* ஒருவரால் நிலா மற்றும் நட்சத்திரங்களை பார்க்க முடியவில்லை என்றாலும்  மிக மந்தமாக தான் தெரிகிறது எனில், அவர் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
* ஒருவர் திடீரென ஊதா நிற ஈக்களால் சூழப்படுகிறார் என்றால் அவர் ஒரு மாதத்தில் இறந்துவிடுவார் என்று அர்த்தமாம்.
 
* கருடன், காகம், கழுகு - புறா ஒருவரது தலையில் வந்து அமர்வது மரணத்தின் அறிகுறி என சிவ புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
* ஒருவர் தனது நிழலில் தனது தலைப் பகுதியை காண முடியவில்லை என்பது மற்றுமொரு மரணத்தின் சமிக்ஞை என சிவ புராணத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளது.
 
* எதையும் சரியாக பார்க்க முடியாமல் போவது மற்றும் நெருப்பை தெளிவாக பார்க்க முடியாமல் போவது மரணம் உங்களை எட்டிக்  கொண்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டும் சமிக்ஞை.
 
* எண்ணெய், தண்ணீர் போன்றவறில் ஒருவரது பிரதிபலிப்பை பார்க்க முடியாவிட்டால் ஆறு மாதத்தில் அவர் இறந்துவிடுவார் என சிவ  புராணத்தில் கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :