வியாழன், 30 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified புதன், 8 பிப்ரவரி 2023 (23:04 IST)

'' நான் வந்துவிட்டேன் ''பிறந்தவுடன் பேசிய குழந்தை....மக்கள் ஆச்சர்யம்

Kanchipuram
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தை ஒன்று சில  நிமிடங்களிலேயே பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ள சின்ன அழிசூர்கிராமத்தைச் சேர்ந்த தம்பதி சந்திரன். இவரது மனைவி ரேவதி.

இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதாக ரேவதி கர்ப்பமடைந்தார்.

நிறைமாத கர்ப்பிணியாக ரேவதிக்கு நேற்று காலை 8 மணியளவில் திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது.

எனவே அவரை களியாம்பூண்டி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு, காலை 10 மணியளவில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சுகப் பிரசவமாகப் பிறந்த அக்குழந்தை 2.9 கிலோ எடையுடன் பிறந்ததாகவும்,  குழந்தை பிறந்தவுடன் நான் வந்துவிட்டேன் என்று பேசியதாக கூறப்படுகிறது.

ஆனால், மருத்துவர்கள், குழந்தை பேசியதுபோல் அவர்களின் காதில் விழுந்திருக்கலாம் என்று தெரிவித்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.