வியாழன், 30 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified புதன், 8 பிப்ரவரி 2023 (18:34 IST)

தமிழகத்தின் இந்த நகரில் விமான நிலையம் இல்லை: மத்திய அரசு அறிவிப்பு!

airport
சென்னையில் இரண்டாவது விமான நிலையம் விரைவில் அமைக்கப்படும் என மத்திய அரசு கூறியிருந்த நிலையில் தமிழகத்தில் உள்ள இன்னொரு நகரில் விமான நிலையம் அமைக்க இருந்த நிலையில் அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றான ஓசூரில் விமான நிலையம் தொடங்கும் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது
 
திமுக எம்பி வில்சன் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மத்திய அமைச்சர் விகே சிங் பெங்களூர் விமான நிலையத்திலிருந்து 150 கிலோமீட்டர் சுற்றளவில் வேறு விமான நிலையங்கள் அமைக்க கூடாது என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் ஓசூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக தெரிவித்துள்ளார். 
 
ஆனால் அதே நேரத்தில் நெய்வேலி, வேலூர் ஆகிய பகுதிகளில் விமான நிலைய அமைக்க பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தஞ்சாவூரில் விமான நிலையம் அமைக்க இந்திய விமானப்படை நிலம் வழங்க உள்ளதாகவும் ராமநாதபுரத்திலும் விரைவில் விமான நிலையம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் வி கே சி தெரிவித்தார் 
 
Edited by Mahendran