திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 6 மே 2019 (19:20 IST)

அதிமுகவில் அடிமைத்தனம் பிடிக்காமல் விலகினேன் - செந்தில்பாலாஜி

நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ல் துவங்கி  வரும் 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.  நம் தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தலுடன் 18 சட்டபேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்னும் நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கரூர் அரவக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் செந்தில் பாலாஜியும், அதிமுக சார்பில் செந்தில்நாதனும் போட்டியிடுகின்றனர்.
 
இந்நிலையில் க.பரமத்தி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட செந்தில்பாலாஜி  கூறியதாவது :
 
'தேர்தல் ஆணையமும் - போலிஸும் அதிமுகவுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன என்று குற்றம்சாட்டினார். மேலும் என்னை துரோகி என தொடர்ந்து கூறிவருகிறார்கள்.

சசிகலாவின் காலில் விழுந்து முதல்வர் ஆகிவிட்டு அவரையே தெரியாது என்று முதல்வர் பழனிசாமி சொல்லியிருக்கிறார். 
 
அதேபோல் எடப்பாடி பழனிசாமி அரசை ஊழல் அரசு என தீவிரமாக குற்றம்சாட்டிய துணைமுதல்வர் ஓ .பன்னீர் செல்வமும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். ஆனால் அப்படி நிலையை மாற்றிக்கொள்பவன் நானல்ல. அதிமுகவில் அடிமைத்தனம் இருந்தது பிடிக்காமல்தான் அக்கட்சியிலிருந்து வெளியேறி திமுகவில் இணைந்தேன்' என்று தெரிவித்தார்.