வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 6 மே 2019 (11:24 IST)

மகாபலிபுரம் விடுதியில் போதை விருந்து – 160 பேர் கைது !

மகாபலிபுரம் அருகே உள்ள பட்டிலப்புரத்தில் உள்ள தனியார் விடுதியில் நள்ளிரவில் நடைபெற்ற விருந்தில் போதைப் பொருட்கள் உபயோகப்படுத்திய 160 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வேலை செய்பவர்கள் வார இறுதி நாட்களில் ரிசார்ட்கள் மற்றும் தனியார் விடுதிகளில் கூடி பார்ட்டிகள் செய்து கொண்டாடுவது அதிகரித்து வருகிறது. ஆனால் இந்தப் பார்ட்டிகளில் அளவற்ற மதுவும் தடை செய்யப்பட்ட போதைமருந்துகளும் புழக்கத்தில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன.

அண்மையில் கோவையில் ரிசார்ட்டில் போதை மருந்துகள் பயன்படுத்தப்பட்டதாக 150 பேர் கைது செய்யப்பட்டனர். அதையடுத்து இப்போது மகாபலிபுரத்தில் உள்ள பட்டிப்புலம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் போதை பொருள் மற்றும் மது விருந்து நடப்பதாக புகார் வந்ததை அடுத்து போலிஸார் அங்கு சென்று அங்குள்ள 160 பேரைக் கைது செய்துள்ளனர். அதில் 7 பெண்கள் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.