ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (13:57 IST)

எனக்கு இறை நம்பிக்கை கிடையாது.. இவர்கள் தான் இறைவனுக்கு சமமானவர்; அமைச்சர் உதயநிதி

எனக்கு இறை நம்பிக்கை கிடையாது, சக மனிதனுக்கு எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உதவுபவரே இறைவனுக்கு சமமானவர் என சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும் அவர் இந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:
 
இந்தியாவிலேயே ஊட்டச்சத்து நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு சிறந்து விளங்குவதற்கு காரணம் தமிழ்நாட்டு மீனவர்கள் தான். ஜல்லிக்கட்டுக்காக மாணவர்களுடன் நமது மீனவர்களும் போராடினார்கள்
 
மிக்ஜாம் புயல் பெருமழையால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு  இன்று ஒருநாள் மட்டும் ரூ.12.88 கோடி மதிப்பிலான நிவாரணத் தொகை தமிழ்நாடு அரசு வழங்க உள்ளது. ஆனால் மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு இதுவரை  ஒரு பைசா கூட நிவாரணமாக கிடைக்கவில்லை”
 
Edited by Mahendran