செவ்வாய், 2 ஜூலை 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (09:03 IST)

கோடியக்கரை கடற்பகுதியில் ஒதுங்கிய 26 கிலோ கஞ்சா பொட்டலங்கள்: அதிர்ச்சி தகவல்..!

நாகை மாவட்டம் கோடியக்கரை கடற்பகுதியில் 26 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கரை ஒதுங்கியுள்ளதை அடுத்து கடலோர காவல் குழும போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கைக்கு படகில் கடத்தி செல்லப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் கடலில் விழுந்து, கரை ஒதுங்கியிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தகவல் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து வேதாரண்யம்  கடலோர காவல் குழும போலீசார் விசாரணை செய்த நிலையில் இலங்கைக்கு கடத்திய போது கஞ்சா பொட்டலங்கள் கடலில் தவறி விழுந்து கரை ஒதுங்கி இருக்கலாம் என கூறியுள்ளனர்.

மீனவர்கள் என்ற போர்வையில் சமூக விரோதிகள் சிலர் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்திக்கொண்டு செல்வது அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து கடலோர காவல்படை இன்னும் கூடுதல் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன

மீனவர்கள் போர்வையில் கஞ்சா கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்

Edited by Siva