வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 22 மார்ச் 2019 (20:42 IST)

பாஜகவுக்கு பிரச்சாரம் செய்வேன், தமிழிசைக்கு செய்ய மாட்டேன்: பழம்பெரும் இயக்குனர்

பாஜகவுக்கு பிரச்சாரம் செய்ய போவதில்லை என்று ஏற்கனவே சுப்பிரமணியன் சுவாமி சமீபத்தில் பேட்டி அளித்த நிலையில் பாஜகவின் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருபவரும், பழம்பெரும் இயக்குனருமான விசு, பாஜகவுக்கு பிரச்சாரம் செய்வேன், ஆனால் தமிழிசை தொகுதியில் மட்டும் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார்.
 
பாஜகவில் உறுப்பினராகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், ஆனால் இதுவரை ஒருமுறைகூட கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் தமிழிசையை சந்திக்க முடியவில்லை என்றும், அதனால் தமிழிசையை தவிர மீதி நான்கு பாஜக வேட்பாளர்களுக்கும் பிரச்சாரம் செய்வேன் என்று இயக்குனர் விசு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
 
தமிழிசைக்கும் எஸ்.வி.சேகருக்கும் ஏற்கனவே மனஸ்தாபம் இருப்பதால் விசுவை அடுத்து எஸ்.வி.சேகரும் தமிழிசைக்கு பிரச்சாரம் செய்ய மாட்டார் என்றே கருதப்படுகிறது. கனிமொழி என்ற வலுவான போட்டியாளரை எதிர்கொள்ளும் தமிழிசைக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது