வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: வெள்ளி, 22 மார்ச் 2019 (12:50 IST)

பாஜகவில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர்!!!

பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் டெல்லியில் பாஜக அமைச்சர்கள் முன்னிலையில் பாஜகவின் இணைந்தார்.
 
கடந்த சில ஆண்டுகளாக மோசமான ஃபார்ம் காரணமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்த கவுதம் கம்பீர் சமீபத்தில் அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
 
இதையடுத்து ஓய்வுக்குப் பின்னர் கம்பீர் அரசியலுக்கு வரப் போகிறார் என்றும், பாஜக சார்பில் அவர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் செய்திகள் உலாவர ஆரம்பித்தன. ஆனால் அதில் உண்மை எதுவும் இல்லை என கம்பீர் கூறி வந்தார்.
இந்நிலையில் இன்று டெல்லியில் அமைச்சர்கள் அருண் ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் கம்பீர் பாஜகவில் இணைந்தார். டெல்லியில் உள்ள மக்களவை தொகுதி ஒன்றிலும் அவர் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.