புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 22 மார்ச் 2019 (15:31 IST)

பாஜகவில் மோதல் ஆரம்பித்தது! எச் ராஜா மீது கடுப்பான தமிழிசை!

அடுத்த மாதம் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு தமிழ்நாட்டில் பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. அதன்படி மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சமீபத்தில் வெளியிட்டிருந்தார். 
 
இது பாஜகவினர் மத்தியில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. அதற்கு முக்கிய காரணமே கட்சியின் தலைமை அறிவிக்கும் முன்பே ஹெச்.ராஜா வேட்பாளர்களை அறிவித்துவிட்டது தான். அதற்கு பிறகு  தான் பாஜக தலைமை நேற்று (மார்ச் 21) முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டது. 
 
தமிழகத்தில் ஆளுங்கட்சி அதிமுக கூட்டணியில் பாஜக.வுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால்,  ஹெச்.ராஜா அறிவித்திருந்த  அதே 5 வேட்பாளர்களும் அதிகாரபூர்வ பட்டியலில் இடம் பெற்றனர். இதனால்   தமிழிசை எச் ராஜா மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறார். 
 
சமீபத்தில் இதைப்பற்றி  பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தமிழிசை, தமிழகத்தில் பாஜக தலைவர் நானா இல்லை அவரா,  நானும் மற்ற தலைவர்களும் அவர் அறிவிக்கும் வேட்பாளர்களின் பட்டியலை கேட்கவேண்டுமா என காட்டமாக கூறியுள்ளார்.
 

 
எச் ராஜா தன்னுடைய தொகுதியை உறுதி செய்யவே வேட்பாளர்கள் பட்டியல் வருவதற்கு முன்பாகவே தனது பெயரையும் அங்கே பதிவு செய்துவிட்டார் என்று பாஜக தரப்பில் ஒரு பேச்சும் அடிபடுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மையென்பது சரிவர தெரியவில்லை.