திமுக - காங்கிரஸ் ஜாதகத்த பார்த்தேன்; ஒன்னும் செட் ஆகல.. எச்.ராஜா பயங்கரம்

raja
Last Modified வெள்ளி, 22 மார்ச் 2019 (18:40 IST)
கூட்டணியில் தூத்துகுடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், கோவை மற்றும் சிவகங்கை என ஐந்து தொகுதிகளை பெற்றுள்ளது பாரதிய ஜனதா கட்சி. 
 
மேலிடம் நேற்று தமிழக பாஜக வேட்பாளர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி தூத்துக்குடியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் எச்.ராஜா, கோவையில் சிபி. ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்தரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த  எச்.ராஜா, திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு ஜோசியர்களிடம் கொடுத்து ஜாதகம் பார்த்தேன். இந்த கூட்டணிக்கு கொஞ்சம் கூட வெற்றி வாய்ப்பு கிடையாது. இவர்களில் தேர்தலில் வெற்றிபெற சிறிய வாய்ப்பு கூட கிடையாது. ஜோசியர்கள் இதைத்தான் சொல்கிறார்கள். 
 
அதனால் பாஜக - அதிமுக கூட்டணிதான் தமிழகத்தில் வெற்றிபெறும். எச்.ராஜா ஏற்கனவே தலைவர் ஸ்டாலினின் ஜாதகத்தின்படி அவரால் முதல்வராகவே முடியாது என்று குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :