1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சினோஜ் கியான்
Last Updated : வியாழன், 21 நவம்பர் 2019 (18:25 IST)

நான் முதல்வராக கட்சி தொடங்கவில்லை : ’ரஜினி ,கமல்’ கட்சியில் சீட் போடுகிறாரா டி. ராஜேந்தர் ?

தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் பக்காவாய் போய்கொண்டுள்ளது. இன்றைய தேதிக்கு, தமிழ்நாட்டில்  எந்தப்புறம் திரும்பினாலும் ஒரு பாமரன் கூட தனக்குக் கிடைத்த அறிவை வைத்துக் கொண்டு , தான் கேள்விப்பட்டதைப் புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். எனில் சதா காலமும் சமூக ஊடகங்களிலேயே நாட்களைப் பொழுது போக்கும் இளைஞர்கள் அரசியலில் நுனிப்பில் மேய்ந்தாலும் கூட தங்களுக்குத் தேவையான விவரங்களை விவரமாகத் தெரிந்து கொள்வதிலும் பெரிதும் விரும்பி வருகிறார்கள் .
இந்நிலையில் இன்று காலை, செய்தியாளர்களிடம் பேசிய டி. ராஜேந்தர் ( சிம்புவின் தந்தை ) “அரசியலில் வெற்றி பெற அனுபவம் மட்டும் போதாது. அதை தாண்டு அதிர்ஷ்டம் வேண்டும். ரஜினி, கமலை விட அரசியலில் நான்தான் சீனியர். அதற்காக ரஜினி, கமல் குறித்து நான் எதுவும் கருத்து சொல்லப்போவதில்லை. சொன்னாலும் யார் கேட்பார்கள்?” என்று கூறியுள்ளார்.
 
ஒருகாலத்தில், தனது வித்தியாசமான கதைக்களத்தில் சினிமா படங்களெடுத்து மக்களிடம் தனக்கென தனி முத்திரை பதித்தவர் டி. ராஜேந்தர். உயிருள்ளவரை உஷா ,மைதிலி என்னைக் காதலி ,தங்கைக்கோர் கீதம்,உறவைக்காத்த கிளி, தாய் தங்கை பாசம் என தொடர்ச்சியாக பல வெற்றிப்படங்களை இயக்கியவருக்கு அரசியல் ஆசை எட்டிப்பார்க்க 1996ல் சென்னை பூங்காநகர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராக பதவிவகித்தார்.
 
அதன் பின்னர்,  2004ல் திமுகவிலிருந்து விலகி ’அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் ’என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.
 
அவரது கட்சி போதுமான ஆதரவை மக்களிடம் பெறவில்லை. பின், திராவிட அரசியல் கட்சியில்  டி.ஆர் இருந்தபோதும் அவரது திறமைகளை போதுமான அளவு பயன்படுத்தவில்லை என்பதே உண்மை. 
 
அதன்பின்னர் மறுபடியும்  தனது கட்சியை தூசி தட்டினார். ஆனால் அவருக்கு அரசியல் கைகொடுக்கவில்லை என தெரிகிறது.
 
இந்நிலையில், தனது பேட்டி ஒன்றில் தான் முதல்வர் ஆக கட்சியைத் துவங்கவில்லை என தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், ரஜினி, கமலுக்கு முன்னபாகவே அரசியல் களம் கண்டவர் என்ற  அடிப்படையில், அவர் ரஜினி ,கமலுக்கு  அரசியல் குறித்த டிப்ஸ்களை கொடுத்தாலும், இனி அவர்கள் இருவரும் அதைக் கேட்பதாக இல்லை. அதாவது இருவரும் இணைந்து அரசியலில் பயணப்படபோவதாக தகவல்கள் வெளியாகிறது.
 
இந்நிலையில்,  திராவிடக் கட்சிக்கொள்கையில்  இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, ரஜினி அல்லது கமலின் கட்சியில் சீட் பிடிக்கும் யோசனையில் இன்று   டி.ஆர்.   பேட்டி கொடுத்துள்ளாரோ என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
 
ஏனென்றால் சீமானைப் போல் டி.ஆர் இரு ஸ்டார்களையும் எதிர்க்கவில்லை.விமர்சிக்கவுமில்லை.