புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 29 ஏப்ரல் 2019 (09:02 IST)

பதவி போய் மெரினாவில் தியானம்: துரைமுருகனின் ஒரே ஸ்டேட்மெண்டில் ஓபிஎஸ் அவுட்

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். அதன் பின்னர் சசிகலா தரப்பினர் தனக்கு மரியாதை தருவதில்லை, அழுத்தம் கொடுக்கின்றனர் என கூறி பதவி விலகினார். 
 
ஆனால், அதன் பின்னர் சசிகலா தரப்பினர்தான் தனனி பதவியை ராஜினாமா செய்ய சொல்லி வர்புறுத்தினார்கள் எனவும் கூறினார். இப்போது அவரும் எடப்பாடியும் சேர்ந்துக்கொண்டு சசிகலா தரப்பினரை அதிமுகவைவிட்டே ஒதுக்கிவைத்துள்ளனர். 
 
இந்நிலையில், சூலூர் தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை அறிமுகப்படுத்தும் கூட்டத்தில் கலந்துக்கொண்ட துரைமுருகன், ஓபிஎஸ் குறித்து கிண்டலாக பேசியுள்ளார். அவர் பேசியதாவது, 
ஓ.பன்னீர்செல்வத்தின் பதவி பறிபோனத்துக்கு ஒருவகையில் நானும் காரணம். சட்டசபையில் ஒருமுறை ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து நீங்களே முதல்வராக இருங்கள், அடுத்தும் நீங்களே முதல்வராக இருங்கள், உங்களுக்கு பின்னால் நாங்கள் இருக்கிறோம் என்று சொன்னேன்.
 
உடனே சசிகலா, துரைமுருகன் சொன்னால் ஏதோ இருக்கிறது. திமுகவிடம் ஏதோ பிளான் இருக்கிறது. இந்த சண்டாளன் சொன்னா, சொன்னமாதிரிதான். என்று ஓ.பன்னீர்செல்வத்தை கூப்பிட்டு, பதவியை விட்டு தூக்கிவிட்டனர். அதனை தொடர்ந்து தியானம் அப்படி இப்படி என அவர் இப்போது எப்படியோ மாறிவிட்டார் என நகைச்சுவையாக கூறினார்.