1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Husband killed wife because she suspect him

கணவன் மீது சந்தேகப்பட்ட மனைவி கத்தியால் குத்திக் கொலை

கணவன்
திருநெல்வேலி மாவட்டம் கோடீஸ்வரன் நகரை சேர்ந்த காதர்மைதீன் தன்னுடைய நடத்தையில் சந்தேகப்பட்டு விவாகரத்துக்கு முயற்சி செய்த மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.


 
 
காதர்மைதீன் சென்னையில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்படுகிறார் அவரது மனைவி நஸ்ரின். காதர்மைதீன் மீது சந்தேகப்பட்டு இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
 
இதனால் கணவரின் நடத்தை பிடிக்காத நஸ்ரின் விவாகரத்து கோரி முஸ்லீம் ஜமாத் மற்றும் மகளிர் காவல் நிலையத்திலும் புகார் செய்திருந்தார்.
 
இந்நிலையில் மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த காதர்மைதீன் தனது மனைவி நஸ்ரினை கத்தியால் வயிற்றில் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து இரத்த வெள்ளத்தில் கிடந்த நஸ்ரின் உயிரிழந்தார். இந்நிலையில் காதர்மைதீனை காவல் துறை தேடிவருகிறது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
About Writer
Caston
அடுத்த கட்டுரையில்
’இதயத்தையே’ இடம் மாற்றி அரசு மருத்துவர்கள் அபாரம்