தொடர்ந்த அரசியல் கொலைகள்; நகரத்தின் ஒட்டுமொத்த போலீஸாரும் கைது

Ocampo
Last Updated: திங்கள், 25 ஜூன் 2018 (20:07 IST)
மெக்சிக்கோவில் நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள் தொடர்ந்து கொலை செய்யப்பட்ட நிலையில் நகர பாதுகாப்பு செயலாளர் கைதை தடுத்த போலீஸார் ஒட்டுமொத்தமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

 
வட அமெரிக்கா மெக்சிகோவில் வரும் ஜூலை 1ஆம் தேதி பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின் அரசியல் கொலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
 
மிசோவ்கன் மாநிலத்தில் உள்ள ஒகாம்போ நகர மேயர் பதவிக்கு போட்டியிட்டவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு நகர பாதுகாப்பு செயலாளர் ஆஸ்கர் கார்சியாவுக்கும் தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.
 
இதனால் நகர பாதுகாப்பு செயலாளர் ஆஸ்கர் கார்சியாவை கைது செய்ய சிறப்பு படையினர் விரைந்தர். ஆனால் ஒகாம்போ நகர போலீஸார் சிறப்பு படையினரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனையடுத்து அந்த போலீஸாரை சிறப்பு படையினர் கைது செய்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :