திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 23 ஜூன் 2018 (10:12 IST)

7 மாத கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்ற கணவன்

விழுப்புரத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியை அவரது கணவனே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் வாட்டம் பூவனூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரும் அதே ஊரைச் சேர்ந்த ஜெயந்தி என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்கள் நெருங்கிப் பழகியதால் ஜெயந்தி கர்ப்பமானார்.  
 
இதனால் ஜெயந்தி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பலமுறை சீனிவாசனிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால் சீனிவாசன் பல காரணங்களை சொல்லி இதனை தட்டிக்கழித்து வந்துள்ளார். 6 மாத கர்ப்பத்தின் போது ஜெயந்தி தனது பெற்றோரிடம் இதனை கூறியுள்ளார். அதிர்ந்துபோன பெற்றோர்கள் கடந்த 20 தினங்களுக்கு முன்பு சீனிவாசன் ஜெயந்திக்கு திருமணம் செய்து வைத்தனர்.
 
இந்நிலையில் ஜெயந்தியை கோவிலுக்கு அழைத்து சென்ற சீனிவாசன், அவரை அடித்துக் கொன்றுள்ளார். பின் ஒன்றும் தெரியாததுபோல், மனைவியை காணவில்லை என காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீஸார் சீனிவாசனிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். 
 
விசாரணையில் சீனிவாசன், ஜெய்ந்தியுடன் வாழப்பிடிக்காததால் அவரை அடித்துக் கொலை செய்தேன் என கூறினார். இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.