திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (11:52 IST)

ஒன்னில்ல இரெண்டில்ல.. ஐந்து மனைவிகளுடன் மஜாவாய் வாழ்ந்த மாதவன் கைது!

போலி நகைகளை விற்று அதன் மூலம் வந்த பணத்தில் 5 மனைவிகளுடன் சொகுசாய் வாழ்ந்து வந்த போலி ஆசாமியை போலீஸார் கைது செய்துள்ளனர். 
 
நாகை மாவட்டம் சீர்காழி அருகே மாதவன் என்பவன் போலி நகைகளை அடகு வைத்து ரூ.25 லட்சம் வரை ஏமாற்றி தனது 5 மனைவிகளுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான். 
 
சீர்காழி, சட்டநாதபுரம், புத்தூர், மங்கைமடம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ஊர்களில் உள்ள அடகு கடைகளில் தனது கைவரிசையை காட்டியுள்ளான் மாதவன். இந்த பணத்தை வைத்து 5 மனைவிகளுடன் சொகுசு வீடு,கார், பைக் என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். 
மாதவன் மீது எழுந்த புகாரால் அவனை கைது செய்து அவனிடமிருந்த கார், பைக் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். 
 
மேலும் மாதவன், பல பெயர்களில் போலி ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் என பல அரசு அடையாள அட்டைகள் உள்ளூர் முகவரியில் வைத்துள்ளதையும் கண்டறிந்து அவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.