கட்டாய கல்யாணத்தால் காதலனோடு சென்ற மனைவி – கணவர் தற்கொலை !

Last Modified திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (10:34 IST)
திருமனமாகி 40 நாட்கள் ஆன நிலையில் மனைவி தன் முன்னாள் காதலுடனுடன் சென்று விட்டதால் விரக்தியடைந்த கணவன் பூச்சி மருந்தைக் குடித்து உயிரிழந்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த அருவிழமங்கலம் என்ற ஊரைச் சேர்ந்த பாக்யராஜ் என்பவருக்கும் திருவாரூர் மாவட்டம் நாககுடி என்ற ஊரைச் சேர்ந்த கௌசல்யா என்ற பெண்ணுக்கும் கடந்த 40 நாட்களுக்கு முன்னதாக திருமணம் நடந்துள்ளது. பாக்யராஜுக்கும் கௌசல்யாவுக்கும் 16 வயது வித்தியாசம். இந்த கல்யாணத்தில் கௌசல்யாவிற்கு சம்மதம் இல்லை என்று தெரிகிறது. அவர் தனது ஊரில் உள்ள வேறு ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அதற்கு ஒத்துக்கொள்ளாத அவரது பெற்றோர் அவருக்கு பாக்யராஜைக் கட்டாயக் கல்யாணம் செய்து வைத்துள்ளனர். பாக்யராஜுக்கு தனது மனைவியின் காதல் விஷயங்கள் தெரியுமா என்ற விவரம் தெரியவில்லை.

திருமணம் ஆகி சில வாரங்கள் ஆன நிலையில் ஆடிமாதத்துக்காக கௌசல்யாவை இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவரது பெற்றோர் சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு அவரது முன்னாள் காதலனை சந்தித்த கௌசல்யா யாருக்கும் தெரியாமல் ஊரை விட்டு வெளியேறியுள்ளனர். அவரைத் தேடிப்பார்த்த பெற்றோர் எங்கும் கிடைக்காததால் கௌசல்யாவின் கணவர் பாக்யராஜுக்கு இது பற்றிக் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கௌசல்யாவின் கணவர் பாக்யராஜ் மன உளைச்சலுக்கு உள்ளாகி வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது மகளின் காதலை மறுத்து கட்டாய திருமணம் செய்து வைத்து இப்படி ஒரு உயிரைப் பறித்துள்ளது பெற்றோரின் பிடிவாதம்.இதில் மேலும் படிக்கவும் :