செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 3 ஆகஸ்ட் 2019 (09:28 IST)

கிடைக்காத டி சர்ட்... காஃபி டே சித்தார்த்தா தற்கொலையில் மர்மம்!

காஃபி டே உரிமையாளர் சித்தார்த்தாவின் தற்கொலையில் மர்மம் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு விசாரணை முடக்கிவிடப்பட்டுள்ளது. 
 
காஃபி டே நிறுவனர் சித்தார்த்தா, கடந்த திங்கட்கிழமை மாயமான நிலையில், அவரது சடலம் நேத்ராவதி ஆற்றில் பல மணி தேடலுக்குப் பின்பு கிடைத்தது. இதனிடையே சித்தார்த்தா எழுதியதாக சமூக வலைத்தளத்தில் பரவி வந்தது.
 
அந்த கடிதத்தில், தனது நிறுவனம் முறையாக வருமான வரி செலுத்தவில்லை என தன்னிடம் விசாரணை மேற்கொண்டதாகவும், அதன் பிறகு திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தபோதும் வருமான வரித் துறையினர் தனது சொத்துக்களை முடக்கியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் வருமான வரித்துறையினர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது சரியான தகவல் இல்லை என கூறியுள்ளனர். இதனால், அவரின் தற்கொலையில் மர்மம் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 
 
அதன்படி, ஊழியர்களுக்கு சித்தார்த்தா எழுதியதாக கூறப்படும் கடிதத்தின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதோடு, பெங்களூர் மற்றும் மங்களூரில் காஃபிடே நிறுவனத்துடன் தொடர்புடைய பலரிடமும் புலனாய்வுத்துறையினர் தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகின்றனர்.
காஃபிடேயின் நிதி தலைமை அதிகாரி தற்போது டோக்கியோவில் இருப்பதாகவும் அவர் இந்தியா திரும்பியதும் அவரிடமும் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிகிறது. மேலும், சித்தார்த்தாவின் உடல் கண்டெடுக்கப்பட்ட போது அவர் அணிந்திருந்த டி சர்ட் காணவில்லை, அது எங்கு தேடியும் கிடைக்கவும் இல்லை இது சந்தேகத்தை கூட்டுள்ளது.