1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Husband burned his wife with cigarette light

மண்ணெண்ணெய் ஊற்றி சிகரெட் நெருப்பால் மனைவியை கொல்ல முயன்ற கணவன் !

சிகரெட்
சென்னையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கணவன் சிகரெட் நெருப்பால் மனைவியைக் கொலை செய்ய முயன்ற கொடூரம் நடந்துள்ளது.

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள கக்கன் நகரில் வசித்து வருபவர்கள் ராஜன். இவருக்கும் பஞ்சவர்ணம் என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் இருவருக்கும் குடும்ப வாழ்க்கை சுமீகமாக இல்லை எனத் தெரிகிறது. இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டுள்ளனர்.

இதையடுத்து வழக்கம்போல இருவரும் சண்டை போட்டுக்கொண்டிருக்க கோபமான ராஜன் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை பஞ்சவர்ணத்தின் மேல் ஊற்றி சிகரெட்டால் நெருப்பால் அவரைப் பற்ற வைத்துள்ளார். இதனால் அவர் உடல் முழுவதும் தீப்பரவ அலறியுள்ளார். அவரின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது சம்மந்தமாக அவரிடம் வாக்குமூலம் பெற்ற அதிகாரிகள் உடனடியாக ராஜனைக் கைது செய்தனர்.