வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 நவம்பர் 2019 (13:01 IST)

மண்ணெண்ணெய் ஊற்றி சிகரெட் வைத்து கொளுத்திய கணவன்! சென்னையில் கொடூரம்!

சென்னையில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் உள்ள ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவி உள்ளார். திருமணம் ஆகி சில வருடங்களே ஆன நிலையில் ராஜனுக்கும், பஞ்சவர்ணத்துக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் பஞ்சவர்ணத்தோடு மிகவும் ஆக்ரோஷமாக சண்டையிட்ட ராஜன், ஆத்திரத்தில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றியுள்ளார். பிறகு சிகரெட் நெருப்பால் பற்ற வைத்து பஞ்சவர்ணத்தை உயிரோடு கொளுத்தியுள்ளார்.

பஞ்சவர்ணத்தின் அலறல் கேட்டு அக்கம்பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிவரும் பஞ்சவர்ணம் போலீஸாரிடம் மேற்கண்ட சம்பவங்களை வாக்குறுதியாக அளித்துள்ளார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராஜனை கைது செய்துள்ளனர்.

கணவனே தன் மனைவியை கொடூரமாக கொல்ல முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.