திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (18:33 IST)

திருமணப் பத்திரிக்கை வைக்க சென்ற தம்பதிகள் – பிணமாகக் கிடந்ததில் அதிர்ச்சி !

திருமணப்பத்திரிக்கை வைக்கச் சென்ற கணவன் மனைவி இருவரும் சகோதரி வீட்டில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஈசநத்தம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜா மற்றும் வசந்தாமணி. இவர்கள் இருவரும் தங்கள் மகனின் திருமணத்துக்காக தனது அக்கா வீட்டுக்கு பத்திரிக்கை வைக்க சென்றுள்ளார். ஆனால் அதன்பிறகு அவர்கள் வீட்டுக்குத் திரும்பவில்லை. அவர்கள் சென்ற கார் மதுரை நெடுஞ்சாலையில் அனாதையாகக் கிடந்துள்ளது.

பின்னர் போலிஸார் அவரின் சகோதரி வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். வீட்டுக்காரர்கள் யாரும் இல்லை. வீட்டை சோதனை செய்து பார்த்தபோது வீட்டின் பின்புறத்தில் புதிதாக வெட்டப்பட்ட குழி ஒன்றில் இருந்து வாடை வீசியுள்ளது. அதைத் தோண்டி பார்த்த போது ராஜா மற்றும் அவரது மனைவியின் உடல் கழுத்தறுக்கப்பட்டு கிடந்துள்ளது. இரு உடல்களையும் மீட்ட போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.