வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 14 அக்டோபர் 2019 (06:46 IST)

சென்னை கடன் தொல்லை – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை !

சென்னை ஆவடியில் கடன் தொல்லைக் காரணமாக  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை கொண்டுள்ளனர்.

சென்னை ஆவடியை அடுத்து அன்னனூர் எனும் கிராமம் உள்ளது. அங்கு கோவிந்தசாமி- சுப்பம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். நாகராஜ்(35), ரவி என்ற இரண்டு மகன்களும், கல்யாணி(28) என்ற மகளும் உள்ளனர். கல்யாணி தனது தாய் தந்தையருடனேயே அன்னனூர் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். அவரது கணவர் ஆறுமுகம் அடிக்கடி வந்து தனது குழந்தைகள் மற்றும் மனைவியைப் பார்த்து சென்றுள்ளார்.

இந்நிலையில் கோவிந்தசாமியின் மருமகன் ஆறுமுகம் வழக்கம்போல தன் மனைவி மற்றும் பிள்ளைகளைப் பார்க்க நேற்று வந்துள்ளார். அப்போது வீட்டில் கோவிந்தசாமி, சுப்பம்மாள், நாகராஜ், ரவி ஆகியோர் வாயில் நுரைதள்ளிய நிலையில் இறந்து கிடந்துள்ளனர். மேலும் தன் மனைவி மற்றும் குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளனர். அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

போலிஸார் இறந்தவர்களின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் அவர்கள் தற்கொலைக்கு முயன்றதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.