1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 5 ஜூன் 2020 (11:39 IST)

கோவில்கள் எப்படி இருக்க வேண்டும்? பக்தர்கள் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும்?

வழிபாட்டுத்தளங்களை திறப்பதற்கான வழி காட்டுதல் முறையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 
 
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் ஒன்றாக ஜூன் 8 ஆம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்கள் நிபந்தனைகளுடன் திறக்க அனுமதிக்கப்படும் என ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் வழிபாட்டுத்தளங்களை திறப்பதற்கான வழி காட்டுதல் முறையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு.. 
 
1. நுழைவு வாயில் கண்டுப்பாக சானிடசர்ஸ் கொண்டிருக்க வேண்டும்.
2. கோயிலுக்கு வருபவர்களுக்கு வெப்ப அளவீடு செய்யும்முறை கடைபிடிக்கப்பட வேண்டும். 
3. அறிகுறிகள் இல்லாத நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். 
4. கொரோனா விழிப்புணர்வு குறித்த பதாகைகள் இருக்க வேண்டும். 
5. விழிப்புணர்வு ஆடியோ மற்றும் வீடியோ தொடர்ந்து ஒளிபரப்பட வேண்டும். 
6. காலணிகளை அவரவர் வாகனங்களில் வைக்க வேண்டும். 
7. சமூக இடைவெளியுடன் கூடிய முறையான பார்க்கிங் வசதி இருக்க வேண்டும். 
8. அந்த பகுதிகளில் செயல்படும் கடைகள், உணவகங்கள் முறையான சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டும். 
9. பக்தர்கள் இடைவெளியுடன் நிற்பதற்கு தரையில் குறியீடுகள் வரைந்திருக்க வேண்டும். 
10. முறையான நுழைவாயில் மற்றும் வெளியே செல்லும் வழி என தனித்தனியே இருக்க வேண்டும். 
11. சிலைகள், சிற்பங்களை தொடுவதற்கு அனுமதி கிடையாது. 
12. பஜனைகள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை. 
13. பிரசாதம் அல்லது தீர்த்தம் உள்ளிட்டவற்றை நேரடியாக வழங்க கூடாது.