1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 23 அக்டோபர் 2021 (13:22 IST)

சொமேட்டோ விளம்பர தூதர் பணியிலிருந்து விலகுகிறாரா அனிருத்?

இசையமைப்பாளர் அனிருத் சொமேட்டோ உடனான ஒப்பந்தத்திலிருந்து விலகுவது குறித்த ஆலோசனையில்  இறங்கியுள்ளதாக தகவல்.  

 
மதுரையைச் சேர்ந்த ஒருவர் உணவு டெலிவரி வழங்கும் நிறுவனமான சொமேட்டோவிடம் ஆர்டர் செய்த உணவில் பாதிக்குமேல் வரவில்லை என்று புகார் செய்தார். மேலும் அவர் கஸ்டமர் கேரை தொடர்பு கொண்ட போது உங்களுக்கு பிரச்சினையை விளக்க இந்தியில் விளக்கத் தெரியவில்லை. இந்தியாவில் இருந்துகொண்டு தேசிய மொழியான ஹிந்தி தெரியாமல் ஏன் இருக்கிறீர்கள்? அதனால் உங்களுக்கு பணம் திரும்பக் கிடைக்காது என கூறியதாக தெரிகிறது. 
 
இது பூதாகரமாக வெடித்த நிலையில் சொமேட்டோ நிறுவனம் மன்னிப்பு கோரியது. இதனிடையே சொமேட்டோவின் விளம்பர தூதராக இருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். இந்நிலையில் அவர் சொமேட்டோ நிறுவனத்திற்கு விளம்பரத் தூதராக நடித்தால், தனக்கும் அவப்பெயர் ஏற்படும் என்று நினைத்து ஒப்பந்தத்திலிருந்து விலகுவது குறித்த ஆலோசனையிலும் இறங்கியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.