1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. leading private banks had to make ecommerce transactions

இணையவழி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள சொன்ன... பிரபல தனியார் வங்கிகள்…

corono virus
இணையவழி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள சொன்ன... பிரபல தனியார் வங்கிகள்…

உலகம் முழுவதும் 15,296 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 55 வயதான முதியவர் உயிரிழந்துள்ளது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கொரோனா பரவாமல் தடுக்க மக்கள் பொதுஇடங்களில் கூடுவதை தவிர்க்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் ஹெச்.டி.எஃப்.சி வங்கி தங்கள் பணிநேரத்தை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை குறைத்துள்ளது. மேலும்,ஐசிஐசிஐ வங்கி தங்கள் வாடிக்கையாளர்கள் அதிகளவு வங்கிகளுக்கு வராமல் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளன.
அடுத்த கட்டுரையில்
மத்தியபிரதேச முதல்வராக பதவியேற்றார் சிவராஜ்சிங் சவுகான்