வியாழன், 1 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (12:08 IST)

வீடற்ற ஏழை மக்களுக்கு 8 லட்சம் வீடுகள்! – பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு!

வீடற்ற ஏழை மக்களுக்கு 8 லட்சம் வீடுகள்! – பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு!
வீடற்ற ஏழை மக்களுக்கு வீடு கட்டித்தர தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் இன்று முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் நடைபெறுகிறது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின் நடக்கும் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும்.

தற்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அறிவித்து வருகிறார். இந்நிலையில் கிராமப்புறங்களில் வீடுகளற்ற ஏழை மக்களுக்கு 8,03,924 வீடுகள் அடுத்த 5 ஆண்டிற்குள் கட்டித்தரப்படும். இதற்காக இந்த ஆண்டில் ரூ.8,017.41 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டில் 2,89,877 வீடுகள் கட்டித்தரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.