ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (10:13 IST)

10 ஆண்டுகளில் முதல்முறையாக அதிமுக வெளிநடப்பு! – பரபரப்பில் பட்ஜெட் கூட்டத்தொடர்!

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் கூட்டத்தொடரை புறக்கணித்து அதிமுகவினர் வெளியேறியுள்ளனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் இன்று முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் நடைபெறுகிறது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின் நடக்கும் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும்.

இந்நிலையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். இந்நிலையில் பேச வாய்ப்பு கேட்டு அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். ஆனாலும் தொடர்ந்து பட்ஜெட் வாசிக்கப்பட்டு வரும் நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளியேறியுள்ளனர்.