செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 2 டிசம்பர் 2019 (19:06 IST)

25 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி –வித்தியாசமாக மார்க்கெட்டிங் செய்த ஹோட்டல் அதிபர் !

வேலூரில் உணவகம் திறந்த முதல்நாளன்று 25 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி வழங்குவதாக அறிவித்ததால் கூட்டம் கூடி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

வேலூரில், ஆரணி சாலையோரம் ஆர்.ஆர் வீட்டுமுறை உணவகம் என்ற புதிய உணவகம் இன்று துவங்கப்பட்டது. பிரியாணிக்கு பெயர் போன வேலூரில் தனது ஹோட்டலை எப்படி பிரபலப்படுத்துவது என எண்ணிய அந்த உணவகத்தின் உரிமையாளர் முதல்நாளான இன்று 25 பைசா நாணயம் கொண்டு வருபவருக்கு ஒரு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவித்தனர்.

25 பைசா நாணயங்கள் செல்லாது என அறிவிக்கபப்ட்ட நிலையில் மக்கள் தேடிப் பிடித்து அந்த நாணயங்களைக் கொண்டு வந்தனர். கிட்டதட்ட 300க்கும் மேற்பட்டோர் ஹோட்டலுக்கு வெளியே கூடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 100 பேர்களுக்கு மட்டுமே பிரியாணி தயார் செய்யப்பட்டதால் மிச்சப்பேர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.