செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 26 ஏப்ரல் 2021 (08:16 IST)

மீண்டு வா இந்தியா! – துபாய் முழுவதும் பறந்த இந்திய கொடி!

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்துள்ள நிலையில் இந்த பாதிப்பிலிருந்து இந்தியா மீள வேண்டும் என நேற்று துபாய் முழுவதும் பல இடங்களில் இந்திய கொடி காட்சிப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் பலர் உயிரிழந்துள்ள சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவிற்கு உதவ பல நாடுகள் நேச கரம் நீட்டியுள்ள நிலையில் நேற்று இரவு துபாயில் பிரபல உயரமான ஹோட்டலான புர்ஜ் கலீபா உட்பட பெரிய கட்டிடங்களில் இந்திய கொடி காட்சிப்படுத்தப்பட்டதுடன் StayStrongIndia என்ற வாசகங்களும் இடம்பெற்றன.