1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 11 மே 2018 (10:55 IST)

புலி எதனால் பதுங்குகிறது? சீமானின் இமெயிலால் பரபரப்பு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக சீமான் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை ஐந்து நிமிடங்கள் மட்டுமே சந்தித்தார் என்றும், அவருடன் எடுத்து கொண்டதாக கூறப்படும் புகைப்படம் போலி என்றும், பிரபாகரன் உயிருடன் இருப்பது சீமானுக்கு தெரியாது என்பதால் அவர் பல பொய்களை அடுக்கி கொண்டே செல்வதாகவும் கூறியிருந்தார்.
 
எந்த ஒரு சின்ன விஷயத்திற்கும் மணிக்கணக்காக ஆவேசமாக விளக்கம் அளிக்கும் சீமான், வைகோவின் இந்த கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்காமல் அமைதியாக இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.
 
இந்த நிலையில் சமீபத்தில் சீமான் தனது கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களுக்கு ஒரு இமெயில் அனுப்பியுள்ளதாகவும், அதில் வைகோ தன்னை விமர்சனம் செய்து அவரை முன்னிலைப்படுத்த முயல்வதாகவும், வைகோ கூறும் கருத்துகளுக்கு நமது கட்சி தொண்டர்கள் எந்தவித எதிர்வினையும் ஆற்ற வேண்டாம் என்றும் அந்த இமெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்து வருகின்றது. அனைத்து விஷயங்களுக்கும் பாயும் புலி இந்த விஷயத்தில் மட்டும் பதுங்குவது ஏன்? என்ற கேள்வி நாம் தமிழர் தொண்டர்களிடமும் ஏற்பட்டுள்ளது