ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 23 ஏப்ரல் 2018 (08:11 IST)

ஸ்டெர்லைட் விவகாரத்தில் வாங்க வேண்டியதை வாங்கிவிட்டார் வைகோ: தமிழிசை

தூத்துக்குடியில் இயங்கி வரும் தாமிர தொழிற்சாலையான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் ஆதரவு கொடுத்து வருகின்றன.
 
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளாக குரல் கொடுத்து வருபவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.இந்த நிலையில் தற்போது அவர் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக வாகன பிரச்சாரம் செய்து வருகிறார்.
 
வைகோவின் இந்த போராட்டம் குறித்து கருத்து கூறிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், 'ஸ்டெர்லைட் விவகாரத்தில் வைகோ, வாங்க  வேண்டியதை வாங்கிவிட்டு அதனை மறைப்பதற்காக வாகன பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும், வைகோவின் இந்த பிரச்சாரத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். 
 
தமிழிசையின் இந்த கருத்துக்கு மதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.