ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 23 ஏப்ரல் 2018 (12:56 IST)

மன்சூர் அலிகானை கைது செய்த போலீஸ் ஏன் எஸ்.வி சேகரை கைது செய்யவில்லை - சீமான் கேள்வி

காவிரி விவகாரத்தில் மன்சூர் அலிகானை கைது செய்த போலீஸ், பெண்களை தரக்குறைவாக பேசிய எஸ்.வி. சேகரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, சீமான், வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் கைது செய்ய்ப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவர்களோடு கைது செய்யப்பட்ட மன்சூர் அலிகான், போலீசாரை தரக்குறைவாக விமர்சித்ததால் விடுவிக்கப்படாமல் இன்னும் சிறையில் உள்ளார்.
 
நடிகர் மற்றும் பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். பத்திரிகையாளர் பாதுகாப்பு நல சங்கத்தினரின் புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளில் எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மன்சூர் அலிகானை கைது செய்துள்ள போலீஸ், ஏன் பெண்களை தரக்குறைவாக பேசிய எஸ்.வி சேகரை இன்னும் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.