செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 3 அக்டோபர் 2018 (08:01 IST)

நீதிபதி தீபக் மிஸ்ரா மனைவிக்கு அல்வா, மல்லிகைப்பூ கொடுத்தவர்கள் கைது

சமீபத்தில் திருமணத்தை தாண்டிய தகாத உறவு என்பது தனிப்பட்ட நபரின் விருப்பம் என்றும், அது ஒரு கிரிமினல் குற்றமல்ல என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பு வழங்கினார்.

இந்த தீர்ப்பு பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த தீர்ப்புக்கு இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில் இந்த தீர்ப்பு வழங்கிய முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ராவின் மனைவிக்கு அல்வா மற்றும் மல்லிகைப் பூ அனுப்ப முயன்ற இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர். விழுப்புரத்தில் உள்ள கொரியர் அலுவலகம் ஒன்றுக்கு வந்த இந்து முன்னணி மாநில அமைப்பின் தலைவர் ஆசைத்தம்பி மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளை விழுப்புரம் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, கைது செய்ததால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.