1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 24 செப்டம்பர் 2018 (12:36 IST)

கள்ளக்காதலியின் கள்ளக்காதல் - கடுப்பான கள்ளக்காதலன் செய்த வெறிச்செயல்

கள்ளக்காதலி வேறு ஒரு நபருடன் கள்ளக்காதல் வைத்திருந்ததால் கடுப்பான கள்ளக்காதலன் கள்ளக்காதலியை கொன்ற சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் சுதா(32). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்வு இறந்துவிட்டதால், சுதா தனது 7 வயது மகனுடன் வசித்து வந்தார்.
 
கணவனை பிரிந்து வாழ்ந்த சுதாவிற்கு சதீஷ் என்ற நபருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. சதீஷ் அவ்வப்போது சுதா வீட்டிற்கு சென்று அவருடன் உல்லாசம் அனுபவித்துள்ளார்.
 
சமீபத்தில் சுதா வீட்டிற்கு சென்ற சதீஷ், அவரது வீட்டிலிருந்து வேறு ஒரு நபர் ஓடி செல்வதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சுதாவிடம் கேட்டதற்கு அது என் தனிப்பட்ட விஷயம், நீ தலையிடாதே என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் சுதாவை கொல்ல திட்டமிட்டார்.
 
அதன்படி நேற்று சதீஷ் சுதாவை பாம்பாறு டேமிற்கு கூட்டிச் சென்றார். அங்கு இருவரும் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்தனர். பின் சதீஷ் சுதாவின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். பின் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
 
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சுதாவின் கள்ளக்காதலனான சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.