செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 1 அக்டோபர் 2018 (06:54 IST)

கள்ளக்காதல் குறித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் பெண் பரிதாப பலி

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் கள்ளக்காதல் என்பது தண்டனைக்குரிய குற்றமில்லை என்று அதிரடியாக ஒரு தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி கள்ளக்காதலில் கணவர் ஈடுபட்டதால் மனமுடைந்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகாத உறவை குற்றமாக கருதும் சட்டப்பிரிவு 497 மீதான வழக்கு ஒன்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தப்போது, 'தகாத உறவு என்பது ஒருவரின் தனிப்பட்ட நபரின் விருப்பம் என்றும், திருமண உறவையும் தாண்டி ஒருவர் வேறொருவருடன் உறவு கொள்வது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் இல்லை என்றும் தீர்ப்பு அளித்தது.  

இந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி சென்னையை சேர்ந்த பிராங்கிளின் என்பவர் வேறொரு பெண்ணுடன் உறவு வைத்திருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இவருடைய மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை விசாரணையின்போது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மேற்கோள் காட்டி தான் செய்தது சட்டப்படி தவறில்லை என்று பிராங்கிளின் வாதாடினார். இதனால் மனமுடைந்த புஷ்பலதா, வீட்டிற்கு வந்தவுடன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு வயதில் ஒரு குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலைக்கு தூண்டாதவரை கள்ளக்காதல் குற்றமில்லை என்று மட்டுமே தீர்ப்பில் இருப்பதால் இந்த சம்பவத்தில் பிராங்கிளின் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிகிறது