புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 31 மே 2019 (16:16 IST)

நீட்டே வேண்டாம் என்றால் சொன்னால் ஆயூர்வேதம் , யுனானி அனைத்திலுமா ? - மாணவர்களை அச்சுறுத்தும் மத்திய அரசு !

ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்தா என அனைத்து படிப்புகளுக்கும் நீட் தேர்வுகள் நடத்தப்படுமென அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்பிற்கு சேர விரும்பும் மாணவர்கள் நீட் எனும் தேர்வு முறையை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு. இதனால் கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கவேண்டும் என தமிழகம் முழுவதும் கோரிக்கை எழுந்தது. ஆனால் மத்திய அரசு இதனை ஏற்கவில்லை.

கடந்த ஆண்டு நீட் தேர்வினால் மருத்துவப்படிப்பிற்கான சீட்டை இழந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அதையொட்டி தமிழகம் முழுவதும் நீட்டிற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் இதுவரை மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. மாணவர்களின் கோரிக்கையை மீறி கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு நடத்தி வருகிறது.

இந்நிலையில் இப்போது ஆயுர்வேதம் , யுனானி மற்றும் சித்தா உள்ளிட்ட அனைத்துப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கொண்டுவர இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மருத்துவப் படிப்புக்கே நீட் வேண்டாம் என சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் மற்ற படிப்புகளுக்கும் நீட் என்று அறிவித்திருப்பது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.