திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 10 ஜூலை 2019 (20:02 IST)

’நல்ல சாப்பாடுக்காக’ ஜெயிலுக்குச் சென்ற திருடன் ! போலீஸார் அதிர்ச்சி

சென்னை தாம்பரத்தில் சாலை ஓரமாக நின்றிருந்த இருசக்கர வாகனம் ஒன்றில் இருந்து பெட்ரொல் திருடியவரை போலீஸார் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
காவல்நிலையத்தில் அவரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், நல்ல சாப்பாடு, சிறையில் கிடைக்கும் என்பதால், நான் மீண்டும் சிறைக்குச் செல்லவேண்டும் எனபதற்காகவே பெட்ரோலை திருடினேன் என்று கூறியுள்ளார். போலீஸார் இதைகேட்டு அதிர்ந்து போயினர்.
 
தாம்பரம் அடுத்த பெருங்குளத்தூரில் வசித்து வந்தவர் ஞானபிரகாசம். இவருக்கு வேலை கிடைக்கவில்லை என்று தெரிகிறது. அதனால் சிறுசிறு திருட்டில் தொடங்கி, டிவி கேமரா வரை திருடியுள்ளார். இந்த திருட்டுக்காக ஏற்கனவே அவரை போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்.
 
இந்நிலையில் கடந்த ஜூன் 29 ஆம் தேதி ஜாமினில் வெளியே வந்த ஞான பிரகாசம், தனக்குத் தேவையான நல்ல சப்பாடு, போதிய ஒய்வும் சிறையிலேயே கிடைக்கின்றது என்று திரும்பவும் அங்கு செல்லவேண்டு பெட்ரோல் திருடுகையில் போலீஸாரிடம் மாட்டிக்கொண்டார். 
 
பின்னர், போலீஸார் ஞான் பிரகாசத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.