1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 24 ஜூலை 2019 (13:43 IST)

இனி அத்திவரதர் நின்ற கோலத்தில் தரிசனம் தருவார்…பக்தர்கள் பரவசம்

வருகிற ஆகஸ்டு 1 ஆம் தேதியிலிருந்து அத்திவரதர், நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு தரிசனம் செய்வார் என முதல்வர் எடப்பாடி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், கடந்த ஜூலை 1 முதல், அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சித் தந்து வருகிறார். அத்திவரதரை தரிசிக்க இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கானோர் தரிசனம் பெற வந்த வண்ணம் உள்ளனர். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எழுந்தருளி தரிசனம் தரும் அத்திவரதர், 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சியளித்து மறுபடியும் குளத்திற்குள் செல்வார்.

அதன்படி ஆகஸ்டு மாதம் 17 ஆம் தேதி குளத்திற்குள் சென்றுவிடுவார். இதனிடையே நேற்று முதலமைச்சர் பழனிசாமி, அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வந்திருந்தார். அவருக்கு கோவில் நிர்வகம் சார்பாக பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதன் பின்பு கோவிலில் எழுந்தருளியுள்ள அத்துவரதரை தரிசனம் செய்து விட்டு, தரிசனத்திற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, ”அத்திவரதரை தரிசிக்க நாள்தோறும், லட்சக்கணக்கில் அன்பர்கள் வருகின்றனர். ஆதலால் அத்திவரதரை இடம் மாற்றம் செய்யும் விவகாரத்தில் ஆகம விதிமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது என கூறினார்.

மேலும் ஆகஸ்டு 1 ஆம் தேதியிலிருந்து அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் எனவும், பக்தர்கள் வசதிக்காக நிழற் கூடம், மருத்துவ முகாம், காவல் உதவி மையங்கள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்படும் எனவும் முதல்வர் பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.