அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பதில் சிக்கல்? பீதியில் பக்தர்கள்!
அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பது திட்டமிட்டபடி நாளை மறுநாள் துவங்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் எழுந்தருளும் வைபவம் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிறது. அந்த வகையில் தற்போது இந்த ஆண்டு அந்த வைபவம் நடந்து வருகிறது.
கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதியில் இருந்து அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சித் தந்து வருகிறார். அவரை தரிசிக்க இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து தினமும் லட்சக்கணக்கானோர் வந்த வண்ணம் உள்ளனர்.
40 வருடங்களுக்கு ஒரு முறை எழுந்தருளி காட்சித் தந்து வரும் அத்திவரதர், வருகிற ஆகஸ்டு 17 ஆம் தேதி மீண்டும் பூமிக்கடியில் செல்கிறார். ஆகம விதிப்படி அத்திவரதர் 24 நாட்கள் சயன கோலத்திலும், அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சியளிப்பார்.
எனவே நாள் கணக்குப்படி அத்திவரதர் நாளை மறுநாள் முதல் நின்ற கோலத்தில் காட்சி அளிக்க வேண்டும். ஆனால், இதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆம், கடந்த 40 ஆண்டுகளாக அத்திவரதர் சில தண்ணீரில் இருந்ததால் சிலையில் உறுதித்தன்மை குறைந்து உள்ளதாம்.
இதனால் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எனவே, அத்திவரதரின் நின்ற கோலத்தில் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இருந்து 17 ஆம் தேதி வரை ஆட்சியும் காட்சியும் அளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், அத்திவரதர் சித்த புருஷன் 96 வயது நிரம்பிய ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகளின் கனவில் வந்து தன்னை புதைக்க வேண்டாம் என்று அழுதார் என செய்தி வெளியான நிலையில் தற்போது நின்ற கோலத்தில் காட்சி அளிப்பது தள்ளிபோய் உள்ளதால் ஏதேனும் அசம்பாவிதம் நடக்குமோ என பக்தர்கள் பயத்தில் உள்ளனர்.