ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 23 நவம்பர் 2021 (14:27 IST)

பள்ளிகளில் நடக்கும் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க உதவி எண்கள் - அன்பில் மகேஷ்!

பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க உதவி எண்கள் ஒட்டப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறிய அவர், மாணவர்கள் புகார் தெரிவிக்க 1098, 14417 ஆகிய உதவி எண்கள் அனைத்து வகுப்பறைகளிலும் ஒட்டப்படும் என்றும் தமிழகத்தில் புதிதாக 5.80 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
 
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடரும் என கூறிய அவர் பொதுத் தேர்வு என்பதால் 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வர கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறைந்தவுடன் மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் சுழற்சி முறை வகுப்புகள் கைவிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.