ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 2 நவம்பர் 2021 (17:07 IST)

அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
வடகிழக்கு பருவ மழை காற்று பருவ மழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
மேலும் மதுரை விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் கரூர் நாமக்கல் சேலம் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது