திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : சனி, 10 ஜூலை 2021 (18:23 IST)

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை

கோடை காலம் முடிந்து, தென் மேற்குப் மழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

தமிழகத்தில் மழைக் காலம் தொடங்கியுள்ளது. எனவே வெயிலில் தகிப்பில் இருந்து சற்று விலகி நிலம் குளிர்ச்சியடையும் பொருட்டு மழையை விவசாயிகளும், மக்களும் வரவேற்கின்றனர்.

சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில், தமிழகத்தில் கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி  உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.