தீவிரமடைந்த தென்மேற்கு பருவக்காற்றால் தமிழகத்திற்கு மழை!
தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்ததன் காரணமாக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
;,
தென்மேற்கு பருவக்காற்று தீவிரம் அடைந்துள்ளதால் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் மிக பலத்த மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், ஈரோடு, நெல்லை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருப்பூர், விருதுநகர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.