உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி... தமிழகத்தில் மழை குறைய வாய்ப்பு!
வடக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதால் தமிழ்நாட்டில் மழை வெகுவாக குறையும் என தகவல்.
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக மழைப்பொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
ஆம், வங்க கடலில் மத்திய மேற்கு – வட மேற்கு பகுதியில் 11 ஆம் தேதி (நாளை) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இது குறித்து தெரிவித்துள்ளதாவது,
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்து வருகின்றது. இந்நிலையில் நாளை (ஜூலை 11) வடக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதால் தமிழ்நாட்டில் மழை வெகுவாக குறையும்.